கூன் நோய் ஏற்படுவதிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க புதிய புத்தகப்பை!

Wednesday, November 29th, 2017

புத்தகப்பையின் எடை காரணமாகவே அநேக பாடசாலை மாணவர்கள் கூன் நோய்க்கு முகம் கொடுப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கூனல்நோய் தொடர்பாக அறிவூட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி சுகாதார அமைச்சர் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் புத்தகப்பையின் எடை காரணமாகவே அநேக பாடசாலை மாணவர்கள் கூன் நோய்க்கு முகம் கொடுக்கின்றனர். இதன் காரணமாக பாடசாலை மாணவர்களை கூனல் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்க புதிய புத்தகப்பை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூன் நோய்க்கு சத்திர சிகிச்சை நடத்தப்படுகின்றது. கூன் ஏற்படுவதிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக புதிய புத்தகப்பை ஒன்றை அறிமுகப்படுத்துமாறு நிபுணத்துவ மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

இந்த யோசனையை கருத்திற் கொண்டு அடுத்த வருடம் முதல் புதிய புத்தகப்பையை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  கூன் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி வழங்க முடியும். இலங்கையில் இது தொடர்பில் சத்திரசிகிச்சைகளை ஆரம்பிக்கமுடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106