யாழில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Saturday, November 25th, 2017
கொக்குவில் கிழக்கு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (வயது 18) என்ற இளைஞரே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கோப்பாய் பகுதியில் கடை ஒன்று உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி காணொளியின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் உட்பட கோப்பாய் மற்றும் முடாமவடி கடை உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து சிறு கைகோடரி ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106