தொழில் வாய்ப்புக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
Saturday, November 25th, 2017
தொழில் வாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க்பபடும் என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகளை அடுத்த வருடத்திற்குள் தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பல்கலைக்கழங்களில் உள்ள வாசிகசாலை, உணவுச்சாலை மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஐயாயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் மாநகரசபையின் அவசர செலவுகளிற்காக மாதாந்தம் 16இலட்சம் ஒதுக்கீடு!
நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டம்!
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பதிப்பாளருமான டொமினிக் ஜீவா காலமானார்..!
|
|
|


