நீரில் மூழ்கி ஒருவர் பலி : வடமராட்சியில் சம்பவம்!
Friday, November 16th, 2018
வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
நீராடச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தவர்கள் கொடிகாமம் காவல்நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கடற்படையினர் குளத்தில் தேடுதல்களை மேற்கொண்டனர். இதன் போது அவரது உடல் சேற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பலியானவர் அல்வாய் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
போக்குவரத்து சபைக்கு 1250 புதிய பஸ்கள் கொள்வனவு!
படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் !
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் விடயம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது - ந...
|
|
|


