படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் !
Tuesday, December 4th, 2018
யாழ்ப்பாணம், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தில் இதுவரை பதிவுசெய்யப்படாத படகுகளைப் பதிவுசெய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் தெரிவித்தது.
நெடுந்தீவு, ஆழியவளை, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேசங்களில் இதுவரைக்கும் பதிவு செய்யப்படாத 300க்கும் மேற்பட்ட படகுகள் அண்மையில் பதிவுசெய்யப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படகுகள் பதிவுசெய்யப்படாமல் உள்ளன. அவ்வாறு பதிவுசெய்யப்படாமல் உள்ள படகுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொழும்பில் இருந்து கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தைச் சேர்ந்தோர் இந்தப் பதிவு நடவடிக்கைகளுக்காக விரைவில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இந்த ஆண்டுக்குள் இந்தப் பதிவு நடவடிக்கைகள் முழுமை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
நாடளாவிய ரீதியில் பயண கட்டுப்பாடு தொடர்பான இறுதி முடிவு நாளை - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட...
|
|
|


