இலங்கையை நோக்கி வருகிறது அச்சுறுத்தல்!

Friday, November 24th, 2017

காலநிலை மாற்றத்தால் நாட்டில் பட்டினிநிலைமை அதிகரிக்கும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக காலநிலைமாற்றத்தினால் 2050ஆம் ஆண்டில் பாதிக்கப்படவுள்ள நாடுகளில் இலங்கையும் முக்கிய இடம் வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயமானது ஐ.நா.சபையின் உலக உணவுத்திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக 2050ம் ஆண்டு பட்டினி நிலைமை 20 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்றும் இதன் பாதிப்புஇலங்கையிலும் இருக்கும் என்றும், இலங்கையில் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பருவ மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளமையால் அரிசி உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டைச் சூழவுள்ள கடலின் நீர்மட்டம் 1 மீற்றரால் உயரும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடற்கரைப் பகுதியில் அதிக அளவிலான புயல் மற்றும் உப்புக் காற்று என்பவற்றின் காரணமாக விவசாய நடவடிக்கைகள்மேலும் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106