சங்கானை மண்டிகைக் குளம் சுற்றுலாத்தளமாக்கப்படும் – வலி.மேற்கு பிரதேச செயலாளர்!
Friday, November 24th, 2017
சங்கானை மண்டிகைக் குளத்தை மையப்படுத்திய சூழல் சுற்றுலாத் தளமாக விரைவில் மாற்றப்படும். கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் இதற்கான அனுமதியை அளித்ததன் பேரில் இந்தத் திட்டம் விரைவில் நிறைவேறும் என வலி.மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.பிறேமினி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தொடர்பான அபிவிருத்திக் கூட்டமும் விவசாயக் கூட்டமும் வலி.மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.பிறேமினி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
மண்டிகைக் குளப் பிரதேசம் பிரதான வீதியுடன் இணைப்பாக உள்ளது. இந்தப் பிரதேசம் நவீன சுற்றுலாத்தளமாக மாற வேண்டும் என சங்கானை பொது அமைப்புக்களும் விவசாய சம்மேளன பிரதிநிதிகளும் வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே இந்தத் திட்டத்தை முன்னகர்த்துவது தொடர்பில் திட்ட முன்மொழிவு முன்வைக்கப்பட்டு கமநல உதவி ஆணையாளரின் ஒத்தாசையுடனும் ஏனைய அரச நிறுவனங்களின் உதவியுடனும் குளத்தை நவீன சுற்றுலாத் தளமாக மாற்றுவோம் என்றார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106