சுனாமி தொடர்பில் உறுதிப்படுத்த 117 அவசர தொலைபேசி இலக்கம்!

Tuesday, November 21st, 2017

யாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ளலாமென அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அண்மைய நாட்களாக சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுவதுடன், இடம்பெயர்கின்ற சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, இவ்வாறான பொய்யான தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.

பொதுமக்கள் மத்தியில் ஏதாவது இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இலவச அவசர தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்துக்கும் அழைப்பினை ஏற்படுத்தி, உங்கள் பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பாதிப்புக்கள் ஏதாவது உள்ளனவா? அல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? ஏன உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106