வித்தியா வழக்கோடு தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றில் மகிந்த அணி எம்.பி.கேள்வி!
Sunday, November 19th, 2017
சிறுமியை மிருகத்தனமாக கொலை செய்த சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியை சிறையில் அடைத்துள்ளீர்கள். அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு, சுவிஸ்குமாரை விடுவிக்கச் சொல்லி உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர் சபையில் இப்போதும் இருக்கின்றார். இவ்வாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(17) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டில் நீதித்துறைக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால் வடக்குக்கு ஒரு நீதி. தெற்குக்கு ஒரு நீதி என்ற அடிப்படையிலேயே அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவை மீறிப் போராட்டம் செய்தார்கள் என்று தெற்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட கைது செய்கின்றார்கள். ஆனால் வடக்கில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வடக்கில் சிறுமியை குருதி சிந்த மிருகத்தனமாகக் கொலை செய்த சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளீர்கள். அந்தப் பொலிஸ் அதிகாரியை அவ்வாறு செய்யச் சொல்லி உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர் இந்தச் சபையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? ஏன்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106