யாழ்.சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசிகள்!
Saturday, November 11th, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக் கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை நடத்திவரும் றஜிந்தன் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையினுள் உணவுப் பொதியினுள் கஞ்சாவைக் கொண்டு செல்ல முயன்ற வன்னிப் பகுதியைச் சேர்நத இளைஞன் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியல் சாலையில் உள்ளார்.
அவரைப் பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் தோன்றிய சட்டத்தரணி பிரதீபன் குறித்த இளைஞருக்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் றஜிந்தன் என்பவரே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது மனைவியிடம் இருந்து உணவுப் பொதியைப் பெற்று வந்து தருமாறு கேட்டுக் கொண்டார் எனவும் அந்த உணவுப் பொதியினுள் கஞ்சா இருப்பது தெரியாமல் கொண்டு வந்த போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் பல கைதிகள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதாகவும் வாள்வெட்டு சந்தேக நபர்களுடைய முகநூல்கள் பல இயங்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் அர்ப்பாணிப்பான நேர்மையான பல அதிகாரிகள் கடைமையாற்றினாலும் இதற்கு ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர். இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106