எகிப்து எயார் விமானம் விழுந்த இடத்திலிருந்து சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு!

Wednesday, May 25th, 2016

எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்த இடத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மனித எச்­சங்கள் அந்த விமா­னத்தில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளமையை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வுள்­ள­தாக எகிப்­திய தட­ய­வியல் அலுவல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யொ­ரு­வரை மேற்கோள் காட்டி ஏ.பி.சி ஊடகம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது

அந்த விமானம் கடந்த 19 ஆம் திகதி 66 பேருடன் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்ததையடுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது இது­வரை ஒரு கரம் அல்­லது ஒரு கால் என்ற ரீதியில் சுமார் 80 உடல் பாகங்கள் துண்டுதுண்டுகளாக சித­றிய நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­போது முழு­மை­யாக எந்த உடலும் மீட்­கப்­ப­டாத நிலையில் அவ்­வாறு உடல்கள் சித­றி­ய­மைக்கு விமா­னத்தில் இடம்­பெற்ற பாரிய வெடிப்பே கார­ண­மாக இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­வ­தாக அந்த அதி­காரி தெரி­வித்­துள்ளார்

எனினும் மேற்­படி தக­வ­லுக்கு அந்­நாட்டு நீதி அமைச்சின் தட­ய­வியல் திணைக்­களத் தலைவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேற்­படி தகவல் வெளி­யா­வ­தற்கு முதல்நாள் எகிப்­திய அர­சாங்­கத்தால் செயற்படுத்தப்படும் வானில் பறக்கும் விமானங்­களின் இடத்தைக் கண்­ட­றியும் வேவையை வழங்கும் ஸ்தாப­னத்தின் தலைவர், அந்த விமானம் ஏற்­க­னவே கிரேக்க பாது­காப்பு அமைச்­சரால் தெரி­விக்­கப்­பட்­டது போன்று திரும்­ப­ல­டை­யவோ அல்­லது சடுதி­யாக செங்­குத்­தாக விழவோ இல்லை என தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது

இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களின் உடல் பாகங்­களை அடையாளம் காண மர­பணு பரிசோதனைகளை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்கப்பட்­டுள்­ள­தாக கூறப்படுகிறது.

Untitled-2 copy Untitled-3 copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106