யாழ்ப்பாணத்துக்கு 45 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

Friday, November 10th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 45 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

நாடு பூராவும் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த வருட இறுதியில் பரீட்சை நடத்தப்பட்டது. அதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தோற்றியிருந்தனர். நடப்பு வருடத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் சித்தியடைந்தோர் மாவட்ட ரீதியாக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 45 பேர் புள்ளிகள் அடிப்படையில் நியமனத்துக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் வழங்கப்படவுள்ளது. இந்த நியமனங்கள் மூலம் சமுர்த்தி சார்ந்த செயல்பாடுகளை மேற் கொள்ளுவது இலகுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106