கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

Thursday, November 9th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை- 08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைகட்டுக் குளம், நாச்சிக்குடா, நாகபடுவான், முழங்காவில், குமுழமுனை, பல்லவராயன் கட்டு, வெள்ளாங்குளம், வெள்ளாங்குளம் SLLI கணேசபுரம், வெள்ளாங்குளம், 651 ஆவது படைப்பிரிவு முகாம், 652 ஆவது படைப்பிரிவு முகாம், இரண்டாவது அதிரடிப்படை முகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் குருக்கள் புதுக்குளம், குருக்கலூர், பறயனாலங்குளம், நீலியாமோட்டை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை; சுகாதார அமைச்சுடன் விரிவான பேச்சுக்கள் ந...
ஆயிரம் ரூபா வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு - தொழில் அமைச்சர் நிமல் சிறிபா...
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் - கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற...