ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்கு இலங்கை வான்போக்குவரத்து பிரிவு!
Wednesday, November 8th, 2017
இலங்கை விமானப்படையின் வருடாந்த மாற்றுதல் நடவடிக்கைகளுக்காக வான் போக்குவரத்து பிரிவினர் மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி புறப்பட்டுச்சென்ற இக் குழுவில் இலங்கை விமானப்படையின் பல்வேறு கிளைகளையும் வர்த்தகங்களையும் சேர்ந்த 110 பேர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்காக சென்ற இலங்கை விமானப்படையின் வான் போக்குவரத்து பிரிவின் இப்பிரிவின் 94 பேர் கொண்ட மூன்றாவது குழுவினர் தமது 12 மாத கால பணிகளை நிறைவு செய்தபின்னர் நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளனர்.
Related posts:
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது - நுகர்வோர் பாது...
டெல்டாவால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் - மருத்துவர் அசேல குணவர்தன!
மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது - துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்த...
|
|
|


