மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது – துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்ததென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!
Monday, January 31st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியானது எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது என்றும் ஆகவே துவிச்சக்கர வண்டியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேட்டுக்கொண்டார்.
ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் குழந்தைகள் உட்பட பலர் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் வீடுகளில் மின்சார பாவனையை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் கலங்களுக்காக மக்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முடிந்தால், வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கூட்டுறவு கிராமிய வங்கியூடான கடன் வழங்கல் விரைவுபடுத்தப்படும் - கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்!
தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!
கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை எட்டப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங...
|
|
|


