சிறுமி உலகளாவிய ரீதியில் 11 வயது சாதனை!
Saturday, November 4th, 2017
அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுடைய சிறுமி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டிற்கான Discovery Education 3M விஞ்ஞானி சவால் போட்டியில் முதல் பரிசை அவர் பெற்றுள்ளார். அமெரிக்காவின் Lone Tree, Colorado பகுதியை சேர்ந்த Gitanjali Rao என்ற சிறுமியே இந்த பரிசை பெற்றுள்ளார். தண்ணீரில் காரீயம் (lead) கலந்திருப்பதைக்கண்டறிய அவர் உருவாக்கியுள்ள புதிய கருவியான டெத்ஸிற்காக (Tethys) இந்த விருதை அவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள 5 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பங்குபற்றிய இந்தப் போட்டியை, 3M நிறுவனம் நடத்தியது. நாளாந்தபிரச்னைகளுக்கான அறிவியல் பூர்வமான தீர்வுகளை மாணவர்கள் இப்போட்டியில் முன்வைக்க வேண்டும் என அறிக்கப்பட்டது.அதற்கமைய 25,000 அமெரிக்க டொலர் பரிசு தொகையும், அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் விருதும் இந்த போட்டியில்உள்ளடக்கப்பட்டது. இதில், Gitanjali என்ற சிறுமி முதற்பரிசைப் பெற்று அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாகவும்தெரிவாகியுள்ளார்.
நீரில் கலந்துள்ள காரீயத்தின் அளவைக் கண்டறிந்து, புளூடூத் மூலம் கையடக்க தொலைபேசி தகவல் அனுப்பக்கூடிய கருவியை அவர்நிர்மாணித்துள்ளார். தண்ணீரில் பிரதான காரீயம் கலக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டேன். அதிர்ச்சியாக இருந்தது.யாராவது காரீயம் கலந்த நீரை அருந்தினால் பல பாதிப்புகள் ஏற்படும். சிறுவர்களுக்கு குறைபாடுகள் ஏற்படும். அதற்காகவே இந்தகருவியை உருவாக்கினேன். பல முறை இதனை உருவாக்கும் முயற்சியில் தோல்வியடைந்தேன்.
எனினும் அந்த தோல்வியில் கற்றுக் கொண்ட விடயங்கள் ஊடாக வெற்றியை பெற்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் எனஎதிர்பார்க்கிறேன் என இளம் விஞ்ஞானி Gitanjali சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106