தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் டிசம்பர் மாதம் 11 முதல் 20ஆம் திகதிக்கு இடையில் – தேர்தல் ஆணைக்குழு!
Thursday, November 2nd, 2017
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் முதல் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று முற்பகல் கைச்சாத்திட்டார்.
Related posts:
மோடியை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ!
காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு...
|
|
|


