குடும்பப் பதிவுக்கு இன்று இறுதிநாள்!

Thursday, November 2nd, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும் அனைத்து குடும்பங்களின் விவரங்களும் அந்தந்தப் பிரதேச செயலகங்களால் கணினி மயப்படுத்தப்படவுள்ளன. அதற்கான பதிவுகள் அந்தந்தக் கிராம அலுவலர்களால் திரட்டப்பட்டு வரும் நிலையில் இது வரை பதிவு செய்யாதவர்கள் நாளைக்குள் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பிறப்புச் சான்றிதழ் இலக்கம், தேசிய அடையாள அட்டைகளின் இலக்கம், குடும்ப அலகுக்கான தொலைபேசி இலக்கம் போன்ற விவரங்களே பதிவு செய்யப்படுகின்றன. இது வரை பதிவு செய்யாத குடியிருப்பாளர்கள் தத்தமது கிராம அலுவலர் அலுவலகத்தில் இன்று தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

குமுதினி  போன்று  நெடுந்தாரகையையும்  இலவச சேவையாக்க துறைசார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டு - ஈ.பி....
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்குங்கள் - பிரதமரிடம் இலங்கை ஆசிரி...
பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் - சுகாதா...