குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்யும் வாய்ப்பு!
Wednesday, November 1st, 2017
வரவுள்ள பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு நுகர்வோருக்கு கிடைக்கும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நாட்டரிசி இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக இதனை பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவிலிருந்து 53 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
Related posts:
எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப...
பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம்...
விரைவில் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...
|
|
|


