அமைச்சுக்களை வசப்படுத்திய வடக்கின் முதல்வர்!
Tuesday, May 24th, 2016
வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன.
இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் நேற்று பொறுப் பேற்றுள்ளார். குறித்த பதவி கையளிப்பு நேற்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது.
வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தையும் சிறுவர் பாராமரிப்புச் சேவைகளும், சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்கள் பா.சத்தியலிங்கம் வசம் இருந்தன.
இவற்றில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் நேற்றுமுதல் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வார இறுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாக்களிப்பு ஒத்திகை - தேர்தல்கள் ஆ...
உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்து!
போலி காப்புறுதி முகவர்கள் தொடர்பில் விசாரணைகள் வேண்டும் - கோப் குழு வலியுறுத்து!
|
|
|


