யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கம்பஹாவில் விபத்து!
Monday, September 2nd, 2024
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (02) அதிகாலை 3.45 இற்கு இந்த விபத்து கம்பஹாவில் நடந்துள்ளது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பஸ் மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பஸ் சாரதியின் இந்த பொறுப்பற்ற செயல் தொடர்பில் அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
000
Related posts:
மழையுடனான காலநிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வரலாற்று வெற்றியுடன் நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கின்றார் மஹிந்த ராஜபக்ச!
ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட புதிய தகவல்
|
|
|


