மேற்கூரை சூரியக்கல திட்டம் – அரச கட்டிடங்கள், மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி இம்மாதம் நிறைவடையும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Saturday, April 8th, 2023
மேற்கூரைகளுக்கு சூரியக் கலங்களை பொருத்தும் திட்டத்திற்கான அரச கட்டிடங்கள் மற்றும் மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி ஏப்ரல் 15 ஆம் திகதி நிறைவடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் .
தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிநுட்பக் கல்லூரிகள், பாடசாலைகள், ஆயுதப்படை கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள், வழிப்பாட்டு தளங்கள் மற்றும் ஏனைய அரச கட்டிடங்கள் என்பன தொடர்பில் 90 வீதமான கணக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும், இந்திய எக்ஸிம் வங்கியினால் டெண்டர் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106