அனைத்து பேருந்துகளையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிக்க முடிவு!
Sunday, October 29th, 2017
அனைத்து பேருந்துகளையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரையில் 2000 பேருந்துகளுக்கு தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர். பீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பஸ்களுக்கும் GPS தொழில்நுட்பக் கருவிகளைப் பொருத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேருந்து போக்குவரத்தை கண்காணித்தல், அதனை வினைத்திறனாக்குதல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்.பி.சந்திரசிறி குறிப்பிடார்.
Related posts:
நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் வறுமைக் கோட்டின் கீழ் 26 இலட்சம் குடும்பங்கள் உள்ளன - நிதி இ...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை - பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
13 ஆவது திருத்தம் குறித்து ஈ.பிடி.பியின் நிலைப்பாட்டை கேட்டறிந்துகொண்ட அரச சார்பற்ற நிறுவனமான எஃப்...
|
|
|


