ஒரே இலக்கம் இருவருக்கு : தேசிய அடையாள அட்டையில் முறைகேடு!
Saturday, October 28th, 2017
ஒரே இலக்கத்தில் இருவருக்கு இரு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குருதெனிய சிங்ஹாரகம 10 ஏக்கர் பகுதியை சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பகுதியை சேர்ந்த ஏக்கநாயக்க முதியன்சலாகே புஞ்சிரத்ன என்ற நபர் அரச வங்கியொன்றில் சேமிப்பு கண்கொன்றை ஆரம்பிக்க சென்றுள்ளார். இதன்போது தனது தேசிய அடையாள அட்டையை வங்கி உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய அவருக்கு சிறிது நேரத்தில் அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
குறித்த அடையாள அட்டையின் இலக்கத்தில் தெஹியத்த கண்டி பகுதியில் பிரிதொரு நபர் சேமிப்பு கணக்கு ஒன்றிற்கான உரிமத்தினை பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அதிர்ச்சிக்குள்ளான குருதெனிய பகுதியை சேர்ந்த நபர், வங்கி உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
ஆட்பதிவு திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு வங்கி ஊழியர்கள் பணித்துள்ளதோடு, ஆட்பதிவு திணைக்களம் கோரும் பட்சத்தில் ஒரே இலக்கத்தில் காணப்படும் பிரிதொரு அடையாள அட்டை தொடர்பான விபரங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது முதலாவது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் 8500 ரூபாய் ஆகியன கண்டியில் தவறவிட்டதாகவும், இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106