நயினாதீவு – குறிகாட்டுவான் பாதைப்படகு சேவை சீரின்மையால் மக்கள் விசனம்!

Friday, October 27th, 2017

நயினாதீவு – குறிகாட்டுவானுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பாதைப்படகின் சேவை சீரின்மையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளதாகவும், இவ் விடயம் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நயினாதீவு மக்களின் பாவனைக்கான இப்பா தைப்படகு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அப் பாதைப்படகு தற்போது வியாபார நோக்கோடு சேவையில் ஈடுபடுகின்றதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சில படகு சேவை உரிமையாளர்கள், முண்டியடித்து வாகனங்கள் ஏற்றுவதாலும் வியாபார நோக்கோடு பெரிய வாகனங்களை ஏற்றுவதாலும் அங்குள்ள பொதுமக்கள் தமது சிறிய ரக வாகனங்களை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நயினாதீவு – குறிகாட்டுவானுக்கு இடையில் பயணிகள் போக்குவரத்துக்கென இலவசமாக இப் படகுப்பாதை  அமைக்கப்பட்டது. தற்போது இச்சேவை மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருக்கிறது. அப்பகுதி மக்களுக்கென அமைக்கப்பட்ட சேவையில் அம் மக்கள் பயனடைவதில்லை. படகுப்பாதையில் செல்வதற்கு முயலும் பொதுமக்களையும் சிலர் தடுத்து வருகின்றனர்.

இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106