அகதி அந்தஸ்த்து கோரிக்கையை நிராகரிக்குமாறு ஆலோசனை!

Friday, October 27th, 2017

புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி விண்ணப்பத்தை நிராகரித்து, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் சட்டத்தரணி ஒருவர், இந்த ஆலோசனையை வழங்கி இருப்பதாக வெளிநாட்டச் செய்திகள் கூறுகின்றன.

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரியிருந்த இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கின் நிமித்தம், இந்த ஆலோசனை கோரப்பட்டிருந்தது. இதன்படி இலங்கையில் துன்புறுத்தல்கள், மருத்துவ நிராகரிப்புகள், உயிராபத்து என்பன தொடர்வதாக கூறப்பட்டாலும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களது அகதி அந்தஸ்த்து கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்று குறித்த சட்டத்தரணி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையிலேயே குறித்த ஈழ ஏதிலிக்கான தீர்ப்பு வழங்கப்பட விருப்பதாகவும் கூறப்படுகிறது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106