யாழ்ப்பாணம், முல்லைத்தீவிற்கும் முன்னுரிமை!
Thursday, October 26th, 2017
வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்ற அடிப்படையில் குறித்த பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திலும் அநேகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, குறித்த வீட்டுத் திட்டத்தில் இம்மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும் ஏனைய ஆறு மாவட்டங்களுக்கு அவசியமான முறையில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்திட்டம் தொடர்பான பயனாளிகள் தெரிவும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கணவர்மாரை இழந்த பெண்கள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106