இளையோரின் வேலை வாய்ப்புக்காக யாழில் தொழிற்சந்தை!
Thursday, October 26th, 2017
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் தேசிய இளைஞர் சேவை மன்றமும் இணைந்து யாழ்.மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றிருக்கும் இளைஞர்-யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் முகமாக மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு ஒன்றினை நடத்தவுள்ளன.
எதிர்வரும் 28.10.2017 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைறெவுள்ளது.
இத் தொழிற்சந்தை நிகழ்வில் உள்நாட்டு தொழில் வெற்றிடங்களுக்கான ஆளணியினரை தேர்வு செய்வதற்காக தனியார் துறையினைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனங்கள், தொழிற்பயிற்சியினை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் வருகைதரவுள்ளன.
எனவே தொழில்வாய்ப்பிற்காக காத்திருக்கும் அனைவரும் இவ் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது உரிய நேரத்தில் தங்கள் சுயவிபரக் கோவையுடன் பங்கு பற்றி பொருத்தமான வேலைவாய்புக்கள், தொழிற்பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இச் சேவையினூடாக தங்களுக்கான ஆளணியினரை பெற்றுக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் மேலதிக விபரங்களை பெற விரும்புவோர் 021 221 9359 என்ற அலுவலக தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106