ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா!
Monday, May 23rd, 2016
கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
கொல்கத்தா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உதப்பா மற்றும் கம்பீர் ஆகியோர் களமிறங்கினர். இதில் உதப்பா அதிரடியாக ஆடி 25 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, மறுமுனையில் நின்ற கம்பீர் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த யூசுப் பதான் மற்றும் பாண்டே ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தினர். இதில் பாண்டே 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பத்தான் 52 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரை களத்தில் நின்றார்.
பின்னர் 172 ஓட்டங்கள்பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஹைதராபாத் 8 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
ஹைதராபாத் அணியின் ஆரம் பத் துடுப்பாட்ட வீரர்களாக தவான் மற்றும் அணித் தலைவர் வோர்னர் ஆகியோர் களமிறங்கினர். வோர்னர் இந்தப் போட்டியில் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இவரின் விக்கெட் விழ அடுத்தடுத்து வந்தவர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். ஓஜா(15), யுவராஜ் சிங்க (19), வில்லியம்சன் (7), ஹூடா (2), ஹென்றிகியூஸ் (11) என ஆட்டமிழக்க தவான் மட்டும் இறுதிவரை போராடி 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது. கொல்கத்தா அணி சார்பாக சுனில் நரேன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106