அரநாயக்கவில் 25 சடலங்கள் மீட்பு!
Monday, May 23rd, 2016
மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்க பகுதியில் இதுவரையில் 25 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, 138 பேர் காணாமல்போயுள்ளதாகவும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அரசாங்கம், கொழும்பில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற விசேட திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.
கொழும்பில் இடர் முகாமைத்துவ அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசு இதனைத் குறிப்பிட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா –
மழை வெள்ளம் தற்போது குறைந்துள்ளது. நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளதோடு, களனி கங்கையிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 இலட்சம் மக்களின் தொகையும் 3 இலட்சமாக குறைந்துள்ளது. 600 இடைத்தங்கல் முகாம்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. அம் முகாம்களின் தொகை 300 ஆக குறைந்துள்ளது.
பெரும்பாலான மக்கள், வெள்ளம் குறைந்து வரும் நிலையில் தத்தமது வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. உலர் உணவுப் பொருட்களும் தேவையான அளவு உள்ளது. வெ ளிநாடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடை, தலையணை, பெட்சீட், மெத்தை போன்ற பொருட்களே தேவைப்படுகிறன.
அரநாயகாவில் 25 பேர் மரணமடைந்துள்ளனர், 138 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்கின்றன. முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேசங்களுக்கு மக்கள் பார்வையிடச் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மக்கள் செல்வதால் மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. அத்தோடு மழை வெ ள்ளத்தால் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கும் ஒரு பகுதி சேதமடைந்த வீடுகளுக்கும் செல்வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மழை வெள்ளத்தால் கொழும்பு நகரில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை கொட்டும் மீதொட்டமுல்லை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குப்பை லொறிகள் அங்கு செல்ல முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு கொழும்பில் குப்பைகளை வெளியேற்ற விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதோடு, அதற்கான பணிப்புரைகளையும் ஜனாதிபதி விடுத்துள்ளார் என்றும் அமைச்சர் அநுரபிரியதர்ஸன யாபா குறிப்பிட்டார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106