நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல் – காப்பாற்றியது இலங்கை கடற்படை!
Sunday, October 22nd, 2017
நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பலில் இருந்த 07 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய சரக்குக் கப்பல் காலியில் இருந்து சுமார் 65 கடல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் கூறினார். இதனையடுத்து இன்று காலை கடற்படைக்கு சொந்தமான விரைவு தாக்குதல் படகு மூலம், அந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் 07 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட 07 இந்தியர்களும் தற்போது காலி கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார். காப்பாற்றப்பட்ட 07 இந்தியர்களையும் இந்திய தூதுவராலயத்தில் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
Related posts:
வெளிக்கள நிலையத்தின் பரீட்சை 26ஆம் திகதி ஆரம்பம்!
ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் - ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை!
வருடத்தின் நவம்பர் மாதம் வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன - இலஞ்...
|
|
|


