இலங்கையில் வீழ்ந்த மர்மபொருளால் குழப்பம்!

Sunday, October 22nd, 2017

வான் வெளியிலிருந்து வீழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் மர்மபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விண்வெளி பொருள் என சந்தேகிக்கப்படும் மர்மப்பொருள் திக்வெல்ல, வலஸ்கல, எல்லகப்புகே தோட்டத்திலுள்ள வீடொன்றின் கூரையின் மீது இந்த பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிலுள்ளவர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.ஒன்றரை அங்குல அளவிலான கறுப்பு நிறமுடைய பொருள் ஒன்றே அங்கு காணப்பட்டுள்ளது.பாரிய சத்தத்துடனும் பிரகாசமாகவும் பொருள் ஒன்று அந்தப் பகுதியில் வீழ்ந்துள்ளது.வீட்டின் கூறை மீது ஏதோ விழுந்ததனை போன்று சத்தம் கேட்டதாக வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்து்ளனர்.

அதற்கமையவே அவர்கள் வீட்டின் கூரையை சோதனையிட்டுள்ளனர்.அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருளை பரிசோதிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 18ம் திகதி இலங்கையில் மர்மப்பொருள் ஒன்று வீழ்ந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டது.இதுவொரு விண்வெளி கல்லாக இருக்கும் என கூறப்பட்ட போதிலும், அது சீனாவின் விண்வெளி நிலையத்தின் பாகங்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106