இலங்கை ஆசிரியர் சங்கம் சட்டமா அதிபருக்கு அவசர கடிதம்!
Saturday, October 21st, 2017
கடந்த 20.10.2016 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்ஸன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக இன்றுடன் ஒருவருடம் கடந்த நிலையிலும் உயர் நீதிமன்றத்தில் உரிய முறையில் வழக்குத்தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் சட்டமா அதிபருக்கு இன்றைய தினம் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இச்சம்பவம் தொடர்பாக முதலில் விபத்தினாலேயே மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறிய நிலையில் ஐந்து பொலிஸாரைக் கைது செய்து அவர்களுக்கும் பிணைவழங்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படாமையால் மாணவர்களின் மரணம் தொடர்பாக உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை.பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம்.
அவ்வாறெனில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருப்பாரானால் அம்மாணவர்கள் சுடப்பட்டு இறந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.இவ்விரு மாணவர்களின் மரணத்திற்கு நீதியான விசாரணை கோரி 25.10.2016 அன்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடைபெறும் என ஆளுநரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் அதற்குரிய நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை.எனவே , உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருமாணவர்களின் மரணம் தொடர்பாக விசாரணையைத் துரிதப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சட்டமா அதிபருக்குக் கடிதம் மூலம் கோரியுள்ளது.அத்துடன் குற்றத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று தெரிவித்தார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106