உயிருக்கு ஆபத்து – மகிந்த அமரவீர!

Friday, October 20th, 2017

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மகாவலி அபிவிருத்தி அமைச்சை வழங்கிய பின்னர் சிலர் எனக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் பிரதான அரசியல்வாதியின் வீட்டில் கூடி கலந்துரையாடியுள்ளனர். இரண்டு சிறிய கட்சியின் தலைவர்கள் இருவர் உட்பட 11 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த இடத்தில் இருந்துள்ளனர்.மேலும், முகநூல் ஊடக சேறுபூசும் இரண்டு பேரும் அந்த இடத்தில் இருந்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன உணரும் வகையில் எனக்கு எதிராக சேறுபூச இவர்கள் தீர்மானித்துள்ளனர்.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேராத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை காட்சியில் இருந்து நீக்கும் யோசனையை முன்வைத்துள்ளார்.அவருக்கு அப்படியான அனுபவங்கள் உள்ளன.காட்சியில் இருந்து நீக்குவது என்றால் கொலை செய்வது என்று பொருள்.எனினும் இந்த யோசனைக்கு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.இதன் பின்னரே எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவப்பெயரை ஏற்படுத்துவதை ஆரம்பித்துள்ளனர் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106