பொலிஸில் சேவையாற்ற பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
Friday, October 13th, 2017
வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ்துறையில் சேவை புரிய வாய்ப்புக்கள் உள்ளன என்று வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு உள்ளது. 18 தொடக்கம் 28 வயதுடைய ஆண், பெண் இரு பாலரும் பொலிஸ் சேவையில் இணையமுடியும்.
பொலிஸ் பற்றாக்குறையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே காணப்படுகிறார். சேவைகளை வழங்குவதில் பெரும் இடர்கள் காணப்படுகின்றன. வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளன. பட்டதாரிகளை இணைக்கும் வகையில் அவர்களுக்குப் பொருத்தமான பதவிநிலைகளுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.
வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் பின்னணியில் ஆயுத குழுக்கள் எதுவும் இல்லை. மது போதையாலும், தனிப்பட்ட பிரச்சினைகளாலுமே குற்றம் இழைக்கின்றனர். வட மாகாணத்தில் உள்ள மக்களில் 99 சதவீதமானோர் நல்லொழுக்கம் கொண்டவர்கள். ஒரு சிலரது செயற்பாடுகளால் அனைவரையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியாது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106