குழந்தையின் சடலம் புதைகுழியிலிருந்து மீட்பு – தாயும் மகளும் கைது!

Monday, October 9th, 2017

கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் இருந்து புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் நேற்றைய தினம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிசு ஒன்றின் சடலத்தை இருவர் புதைப்பதை அவதானித்த ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்தே பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.இதேவேளை, சிசுவைப் பெற்றெடுத்தார் என்ற சந்தேகத்தில் 35 வயதுடைய பெண் ஒருவரும், அவருக்கு ஒத்தாசை புரிந்தார் என்ற சந்தேகத்தில் பெண்ணின் தாயும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106