அமரர் பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!
Sunday, October 8th, 2017
காலஞ்சென்ற அமரர் பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முன்பதாக ஊர்காவற்றுறை கரம்பொனில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் முக்கியஸ்தர்களான யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக செயலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயகாந்தன், கட்சியின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.


Related posts:
வித்தியா கொலை: விசாரணைகளை துரிதமாக மேற்கொண்ட பொலிசார் கௌரவிப்பு!
இரண்டு வகை பசளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு – சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தை எதிர்...
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வரி கொள்கைகளை திருத்தம் செய்தால் நாடு மீண்டும் மிக மோசமான நிலைக்கு மு...
|
|
|


