குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வரி கொள்கைகளை திருத்தம் செய்தால் நாடு மீண்டும் மிக மோசமான நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் – பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!
Wednesday, May 22nd, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குறைப்பு செய்வதாக குறிப்பிடுவது வேட்டிக்கையாகவுள்ளது என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரிச் சலுகை வழங்கியதை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சியினர் இன்று தேர்தலுக்காக வரி குறைப்பு செய்வதாக வாக்குறுதி வழங்குகிறார்கள்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வரி கொள்கைகளை திருத்தம் செய்தால் நாடு மீண்டும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுகிறது.
தமது ஆட்சியில் மத்திய வங்கி சட்டம் திருத்தம் செய்யப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிடுகிறது.
அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய மத்திய வங்கி செயற்பட்டால் 2022 ஆம் ஆண்டின் நிலைவரமே தோற்றம் பெறும். நிலையான பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு அரச நிதி தொடர்பான சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
அரசாங்கங்கள் மாற்றமடையும் போது பொருளாதார கொள்கைகளை மாற்றியமைப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106