ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணு திட்டம் கைவிடுப்படும் – டொனால்ட் ட்ரம்ப் !
Sunday, October 8th, 2017
அமெரிக்கா – ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அணு திட்டத்தினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைவிடுவுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையை அவர் உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில், ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையினை மீளவும் அமுல் செய்வதா என்பது குறித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானிக்கும். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான உடன்படிக்கையை ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமுறை ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்.ஏற்கனவே ஜனாதிபதி இரண்டு முறை இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தில் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் வாழ்க்கைஓர் பார்வை!
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் - 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல...
இந்தோனேசியாவில் 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு!
|
|
|


