திருமலை எண்ணெய் தாங்கியை அபிவிருத்தி செய்ய முயற்சி!
Friday, October 6th, 2017
திருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வீதி, பெற்ரோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுக மற்றும் மின்சக்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்தியாவும் இலங்கையும் இணைந்து தொழிற்படும் குழு ஸ்தாபிக்கப்பட்டது.
தற்போது இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையே இந்த குழுவின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 15 தாங்கிகள் தற்போது எல்.ஐ.ஓ.சீ நிறுவனத்தினால் உபயோகிக்கப்படுகிறது. ஏனைய தாங்கிகள் குறித்தே இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே தற்போதைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா 300 மில்லியன் உதவி!
பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் திருத்தம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுச...
|
|
|


