40 இராணுவத்தினருக்கு துருக்கியில் ஆயுள்தண்டனை!
Friday, October 6th, 2017
துருக்கி ஜனாதிபதி ரஷிப் தயிப் ஏர்டொகனை கடந்த வருடம் படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக துருக்கியின் 40 இராணுவத்தினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது
இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் உட்பட்ட 31 பேருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒன்பது பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 15 ஆம் திகதி துருக்கி ஜனாதிபதி ரிஷப் தயிப் ஏர்டோகன் அவரது குடும்பத்தினருடன் துருக்கியில் உள்ள ஆடம்பர விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அவரை படுகொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது!
வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டொலருக்கு இராணுவ நிதி உதவி - அமெரிக்கா அறிவிப்பு!
|
|
|


