வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!

Wednesday, November 25th, 2020

தற்போது அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிவர் புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 3 நாட்களில் வங்க கடல் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

வங்க கடல் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவானது. அது தற்போது அதி தீவிர புயலாக இன்று மாலை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி இடையே கரையை கடக்க இருக்கிறது.

இந்த நிலையில் புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 3 நாட்களில் வங்க கடல் பகுதியில் தாய்லாந்து வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், அதன் நிலையை பொறுத்து அடுத்தகட்டமாக புயலாக மாறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும் என்றும் அந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினருட...
சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத மக்களுக்கு உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன்...