ஆசிரியர் தினத்தன்று பாரிய ஆர்பாட்டம் –  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம்!

Thursday, October 5th, 2017

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொள்வதற்காகவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், எதிர்வரும் ஆசிரியர் தினத்தன்று, பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு இன்மை, 2016/2017 சுற்று நிருபத்துக்கு அமைய அதிபர்களுக்கான கொடுப்பனவை வழங்காமை, ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை வழங்காமை போன்ற பல காரணங்களை முன்வைத்தே, குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் 6ம் திகதி பகல் 2 மணிக்கு, கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்குமாறும் , அவ்வமைப்பு மேலும் அழைப்பு விடுத்துள்ளது

Related posts:


மனித உரிமை மீறப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தயார் - வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!
எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சு அறிவிப்பு...
எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் - பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய...