பிரதமர் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி அமெரிக்கா செல்கின்றார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் ஆட்சி நிறைவடைந்து தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதியான டொனல் ட்ரம்பின் ஆட்சியில் இலங்கையின் பிரதமர் ஒருவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர்களுக்கு பதவி உயர்வு : ஆசிரியர் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!
குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மீதுதான வழக்கு தள்ளுபடி!
மன்னார் பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு வினைத்திறனாக இயங்கி வருகிறது - சுகாதார சேவைகள்...
|
|
|


