அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கையில் யாழ் பல்கலையும் இணைவு!
Wednesday, October 4th, 2017
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகம் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த வாரம் முதல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களில் இருந்து மாற்றுவதற்கு எதிராகவும், தங்களது விடுதலைக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது
இந்தவிடயத்தை வலியுறுத்தி, நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால், அரசியல் கைதிகளின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தி இருந்தனர்.
அத்துடன் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயத்தில் தமிழரசு கட்சி தீர்வு வழங்காவிட்டல், அதன் யாழ்ப்பாண அலுவலகத்தை முற்றுகையிடவிருப்பதாகவும் அவர்கள் எச்சரித்திருந்தனர்
இந்தநிலையில் அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106