போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் –  அரசாங்கம்!

Wednesday, October 4th, 2017

சைட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு குறித்து சாதக மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுக்கும் வகுப்பு பகிஸ்கரிப்பை தற்காலிகமாகவேனும் நிறுத்த முன்வர வேண்டும் என அரசாங்கம் கோரியுள்ளது.

உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, மருத்துவ பீட மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமைச்சரினால் கையொப்பம் இடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வு தொடர்பில் திருப்தி கொள்ளவில்லை என்றால், நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு எட்டப்பட்டதன் பின்னர் நிலையான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் இதனை கருத்திற் கொண்டு மாணவர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரால் கோரப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106