அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!  

Monday, October 2nd, 2017

அமெரிக்காவின் லாஸ் வெகஸில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேண்டலே பே ஹோட்டல் அருகில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது திரண்டிருந்த ரசிகர்களை இலக்கு வைத்து, அருகில் இருந்த உயரமான கட்டிடத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் இருவர் உயிரிழந்ததாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

100 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106