மதவாதத்தையும் ஏற்படுத்த எந்தவொரு நபருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – பிரதமர்

Monday, October 2nd, 2017

இனவாதத்தையும் மதவாதத்தையும் நாட்டிற்குள்ளே உருவாக்க எந்தவொருநபருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலாவ ஞானோதய பிரிவெனாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கத்தவர்களை சந்தித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றியபோது

உத்தேச புதிய அரசியல் யாப்பு சட்டமூலம் எவ்விதத்திலும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இடமளிக்கக்கூடியதும் அல்ல. புதிய அரசியல் யாப்பு சட்டமூலத்தில் எவ்விதமான குறைபாடுகளும் இல்லாத போதும் குறித்த சில நபர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் இதனுள் இருப்பதாக சுட்டிக்காட்டி முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தேச அரசியலமைப்பின் மூலம் பௌத்த சமயத்திற்குள்ள இடம் எந்த வகையிலும் மாற்றப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

உத்தேச புதிய அரசியல் யாப்பு சட்டமூலத்தில் பௌத்த சமயத்திற்கு உரிய இடத்தை இல்லாமல் செய்வதற்கோ, நாட்டின் ஒருமைப்பாட்டை குறைவாக மதிப்பிடுவதற்கோ எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106