தாஜூதீன் கொலை : அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் அறிகுறி!

Friday, September 29th, 2017

றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலும் பல நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன் தெரிவித்துள்ளார்.இதன் ஊடாக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், இதன்படி கொலை தொடர்பில் இதுவரை அறியப்படாத சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.குறித்த விசாரணை தொடர்பான முனேற்ற அறிக்கையை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சில தொலைபேசி அழைப்புக்களின் தரவுகள் அழிக்கப்பட்டிருந்தமை இதற்கு முன்னர் தெரியவந்திருந்தது.எனினும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை மீள பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம்!
இலங்கையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவாது - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீ...
விஞ்ஞான பாடத்தில் இடம்பெற்ற தவறு - மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்கும் முறைமை த...