மூன்று உணவு வகைகள்  விலைகள் உயர்வு!

Wednesday, September 27th, 2017

வாயுவின் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து உணவுகளின் விலையிலும் அதிகரிப்பினை ஏற்படுத்த தாம் தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இது குறித்து கூறுகையில், உணவக உரிமையாளர்கள் சங்கம் கூடுகிறது. இது குறித்து இன்றைய தினம் தீர்மானம் ஒன்றினை எடுக்கவுள்ளோம். கட்டாயமாக உணவுகளின் விலையில் அதிகரிப்பு ஏற்படும். குறிப்பாக விலை அதிகரிப்பில் 03 உணவுகளின் மீது கவனம் செலுத்தவுள்ளோம். சோற்றுப் பொதி, பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச சில்லறை விலை இன்று கட்டாயமாக தீர்மானிக்கப்படும். அதனை நாம் நுகர்வோர் அதிகார சபையினூடாக முன்னெடுக்கவுள்ளோம்..” என தெரிவித்திருந்தார்.

சமையல் எரி வாயுவுக்கான விலையானது நேற்று(25) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி லிட்ரோ சமையல் எரி வாயு 12.5Kg ஒன்றின் விலை கொழும்பு சந்தை விலைப்படி 110 ரூபாவினால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106